வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் பணிகளை துவங்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை!

கோவை: வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் வணிக வளாகம் பணிகளை துவங்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் வணிக வளாகம் பணிகளை துவங்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தேயிலைத் தோட்டம் நிறைந்த பகுதியாகும். இங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வால்பாறை பகுதியில் மக்கள் தொகை மூன்று லட்சத்திற்கு குறையாமல் இருந்தது.

வால்பாறை பகுதியில் வனவிலங்கு தொந்தரவு காரணமாகவும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த அளவு ஊதியம் வழங்குவதாலும் வால்பாறை பகுதியில் வாழும் மக்களுக்கு மாற்று தொழில் இல்லாததாலும் மக்கள் வால்பாறையை விட்டு வெளியூர்களுக்குச் சென்று வேலை செய்வதற்காக வெளியூர் சென்று வருகின்றனர். இதனால் தற்போது வால்பாறை மக்கள் தொகை குறைந்து தற்போது 50 ஆயிரம் மக்கள் தொகையை காணப்படுகிறது.

வால்பாறை பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும், படகு இல்லம் அமைக்க வேண்டும், தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும், இவற்றை அமைத்தால் சுற்றுலா மேம்படும் சுற்றுலா பயணிகள் வந்தால் வால்பாறையில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு வால்பாறையில் பணிபுரிந்த முன்னாள் ஆணையாளர் அவர்கள் கடந்த ஆட்சியில் படகு இல்லம் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் படகு இல்லம் அமைக்கும் பணியும், பொதுப்பணித்துறை இடத்தில் 5 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணியும் மற்றும் வால்பாறையில் சாலை ஓரம் நடை பாதை அமைக்கப்பட்டு இருந்தது.



அதேபோல, கடைகாரர்களுக்கு காந்திசிலை அருகே வணிக வளாகம் அமைக்கும் பணியும் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த வேலை முடிக்கும் தறுவாயில் வேலையே முழுமையாக முடிக்காத நிலையில், தேர்தல் தேதி அறிவித்ததால் அவசர அவசரமாக அப்போது இருந்த ஆணையாளரும் அரசியல்வாதிகளும் படகு இல்லத்தையும் தாவரவியல் பூங்காவையும் திறந்து வைத்தனர்.

பின்னர், ஆட்சி மாற்றம் வந்ததாலும் அப்போது இருந்த ஆணையாளரும் மாற்றம் அடைந்ததால் புதிதாக வந்த ஆணையாளரும், ஆட்சி மாற்றத்தாலும் இந்த பணிகள் நிறைவடையாமல்கிடப்பில் உள்ளது. இதனால் படகு இல்லத்தில் தண்ணீர் சாக்கடையக மாறி மாசு அடைந்து துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.

மேலும், காமராஜ் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற தாவரவியல் பூங்காவில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையில் விழுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

எனவே, வால்பாறையில் வளர்ச்சி பணிகள் தடைபட்டு இருப்பதாகவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாவை மேம்படுத்தும் வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...