உலக பழங்குடியினர் தினம்-வால்பாறை வனத்துறையினர் சார்பாகக் கொண்டாட்டம்!!

கோவை: உலக பழங்குடியினர் தினத்தை வால்பாறை வனத்துறையினர் சார்பாகக் கொண்டாடப்பட்டது.


கோவை: உலக பழங்குடியினர் தினத்தை வால்பாறை வனத்துறையினர் சார்பாகக் கொண்டாடப்பட்டது

ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை, மானாம் பள்ளி, வன சரகத்திற்கு உட்பட்ட சுமார் 12-பழங்குடி கிராமங்கள் உள்ளன. இவரில் சுமார் 2500-க்கும் மேல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வால்பாறை மற்றும் மானாம் பள்ளி வன சரகத்தில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு துணை இயக்குநர் ஆரோக்கிய சேவியர் உத்தரவின்படி மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.



மலைவாழ் மக்களுக்கு முத்த குடி மக்களுக்கு வனத்துறையினர் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துச் சிறப்பித்தனர்.



மலைவாழ் மக்களின் பாரம்பரியம் மற்றும் வழக்கைப் பழக்கவழக்கங்களைக் கொண்டாடும் வகையில் கலாச்சாரம் மற்றும் நடனங்கள் ஆகியவற்றை வருங்கால சந்ததியினருக்குச் சொல்லிக் கொடுக்கவும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மலைவாழ் மக்களுக்குத் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினர்.



வனப் பகுதிகளில் கிடைக்கும் சிறுவன மகசூல் தேன், கடுக்காய், பூண்டு, மஞ்சள், காய்கறிகள், மிளகு, சிறு தானியங்கள், குங்கிலியம் மற்றும் காட்டுப் பழங்கள் ஆகிய உணவுப் பொருள் உணவுப் பழக்கங்களை வருங்கால சந்ததியினருக்குக் கற்றுத்தர அறிவுறுத்தப்பட்டு, மேலும் வனத் துறையினருடன் இணைந்து வனத்தைப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன உடை ஆகியவற்றுடன் வருங்கால சந்ததியினருக்குக் கற்றுத்தர அறிவுறுத்தினர். உலக பழங்குடியினர் தினத்தைக் கொண்டாடினர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...