அன்னூர் விஏஓ உதவியாளர் விவகாரத்தில் வன்கொடுமை செயலில் ஈடுபட்டவர் மீது சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் மனு..!

கோவை: அன்னூர் விஏஓ உதவியாளர் முத்துசாமி விவகாரத்தில் வன்கொடுமை செயலில் ஈடுபட்ட கோபிநாத் மீது சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் மனு அளித்தனர்.


கோவை: அன்னூர் விஏஓ உதவியாளர் முத்துசாமி விவகாரத்தில் வன்கொடுமை செயலில் ஈடுபட்ட கோபிநாத் மீது சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் ஒற்றர் பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் அதே அலுவலகத்தில் முத்துசாமி என்பவர் தண்டல்காரர் ஆக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், அதே ஊரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் தனது சொத்து விவரங்களை சரிபார்ப்பு விஷயங்களுக்காக விஏஓ அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி, கோபிநாத் ஆவணங்களில் சரியான ஆவணங்கள் இல்லை என்றும் முறையான ஆவணங்களை கொண்டு வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அப்போது, கோபிநாத், கலைச்செல்வி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தண்டல்காரர் முத்துசாமி குறுக்கிட்டு அரசு அலுவலர்களிடம் தவறாகப் பேச வேண்டாம் என்று கூறி சமாதானப் படுத்த முயற்சி செய்திருக்கிறார். இதையடுத்து கோபிநாத் முத்துசாமியை திட்டியதோடு புகார் அளித்து பணியிலிருந்து தூக்கி விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தண்டல்காரர் முத்துசாமி, கோபிநாத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதை அந்த அலுவலகத்தில் இருந்த ஒருவர் யாருக்கும் தெரியாமல் வீடியோவாக எடுத்துள்ளார்.

முத்துசாமி விஏஓ அலுவலகத்தில் விஏஓ கலைச்செல்வி முன்னிலையில் காலில் விழுந்து கதறும் காட்சி கோவையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சாதியைச் சொல்லி காலில் விழவைத்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு. காவல் துறையில் வழக்குப் பதிவு செய்தும் சம்பவம் குறித்து தெளிவான அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.



இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் இந்த வன்கொடுமை செயலில் ஈடுபட்ட கோபிநாத் என்ற நபர் மீது சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட உதவியாளர் முத்துசாமிக்கு உரிய பாதுகாப்பும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...