கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்றவர் தான், என் மீது போடும் வழக்குகளையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்றவர் தான், என் மீது போடும் வழக்குகளையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அப்போது அக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய போது, என் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயாராக உள்ளதாக பேசி உள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பின் முன்னாள் அமைச்சர்கள் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்காக திமுக முயன்று வருகின்றனர் என்றும் நடவடிக்கை வரும் என நான் தான் முதலில் எதிர் பார்த்தேன் என கூறினார்.
மேலும், நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம் எனவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 4 ஆண்டுகள் ஆட்சி நீடிக்க தங்கமணியும், நானும் முக்கிய காரணமாக இருந்ததால் என் மீது கவனம் செலுத்தினார்கள், கோவை பிரச்சாரத்திலும் அதை வெளிப்படுத்தினார்கள் என கூறினார்.
அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில் இருந்தவர் எனவே, என் மீது எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன், என்னோடு எல்லாரும் தயாராக உள்ளார்கள் எனவும் பேசினார். இந்த நிலையில், அவர் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.