வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் உத்தரவு எதிரொலி: கோவையில் பதிவாளர் அலுவலகங்களில் பதிவாளர் உயர் மேடைகள் அகற்றம்!

கோவை: கோவை மாவட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் உத்தரவு எதிரொலியாக பதிவாளர் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த பதிவாளர் உயர் மேடைகள் அகற்றப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் உத்தரவு எதிரொலியாக பதிவாளர் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த பதிவாளர் உயர் மேடைகள் அகற்றப்பட்டது.

கோவையில் உள்ள சார்பு பதிவாளர் அலுவலகங்களில் பதிவாளர் அமர்ந்து இருப்பதற்கு உயர்ந்த மேடை அமைக்கப்பட்டிருக்கும். அதற்குக் கீழ் இருந்து மக்கள் அவரிடம் தொடர்பு கொள்ளும் படியாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் கோவை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது, பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமர்ந்து பதிவு பணி செய்து வருவதால் பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி சேவை வழங்குவதில் சிரமமாக இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து, இனிவரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவு பணி செய்ய வேண்டுமென அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், சார் பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் கணினிமயமாக்கப்பட்ட நிலையில், அரசுக்கு செலுத்தும் கட்டணங்களை இணைய வழியாக செலுத்துவதால் சார்பதிவாளர்கள் பணத்தை கையாள வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, உயர் மேடைகள் தற்போது தேவையில்லை. பதிவு அலுவலகங்கள் தங்கள் இருக்கையை சமதளத்தில் அமைத்து சுற்றி உள்ள தடுப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி துறை அலுவலர்களுக்கு தெரிவித்தார்.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்பு பதிவாளர் அலுவலகங்களிலும் இருந்த உயர் மேடைகள் அகற்றப்பட்டு சமதளத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...