'எனக்கும் அந்த பெண்ணின் புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மருமகன் மீது தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' - கோவை தங்கம் பரபரப்பு பேட்டி!

கோவை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பெண்ணைத் தூண்டி விட்டு, தன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிந்துஜா யார் என்றே தெரியாது என கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.


கோவை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பெண்ணைத் தூண்டி விட்டு, தன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிந்துஜா யார் என்றே தெரியாது என கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.

கோவை தங்கம் மற்றும் மருமகன் அருண் பிரகாஷ், அவருடைய மனைவி உட்பட 3 பேர் மீது கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிந்துஜா என்கிற பெண் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு ஒன்றைக் கொடுத்துவிட்டு பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார். அதில் கோவை தங்கம் அவர்களின் மருமகன், மகள், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாக கூறி இருந்தார்.

இந்நிலையில், இன்று கோவை ஆடீஸ் வீதியில் உள்ள பத்திரிக்கையாளர் கூட்டரங்கில் கோவை தங்கம் வழக்கறிஞருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் சிந்துஜா என்கிற பெண் ஒருவர் என் மீது கொலை மிரட்டல் விடுவதாக டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த சிந்துஜா என்கிற பெண் எனக்கு யார் என்றே தெரியாது. அவர் முகத்தை பார்த்ததே கிடையாது. செல்போனில் பேசியதே கிடையாது. அவர்கள் உறவினர் யார் என்றே தெரியாது என்றார்.

மேலும், முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, கால் புணர்ச்சி உடன் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். யார் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அந்தப்பெண்ணை தூண்டிவிட்டு இருக்கிறார்களோ அவர்கள் மீது கோவை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆதலால் அந்தப் பெண் கூறியதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.



நான் அரசியலில் மிகவும் தூய்மையாக இருந்து வரக்கூடியவன். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெற்றிலை, பாக்கு, புகையிலை, போடுவது, தண்ணீர் அடிப்பது, மாமிசம் சாப்பிடுவது, என எந்த பழக்கமும் கிடையாது. இதுவரை நான் யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது. அப்படி இருக்கும் பொழுது என்னுடைய பெயரை அந்தப்பெண் குறிப்பிட்டது என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. ஆதலால் உங்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்பதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பு என தெரிவித்தார்.

அதேபோல, நான் அந்தப் பெண் வீட்டிற்குச் சென்றிருந்தால் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்க்கச் சொல்லவும், அந்தப் பெண்ணுக்கு தொலைபேசியில் பேசி இருந்தால் செல்போன் ரிக்கார்டரை எடுத்து பார்க்கச் சொல்லவும், அந்தப் பெண் புகார் தெரிவித்துள்ளார் என்ற உடனேயே நான் நேரடியாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் துணை ஆணையரிடம் சென்று இது குறித்து மனு அளித்துள்ளேன். அந்தப் பெண்மணி பின்னால் இருந்து தூண்டி விடக்கூடிய அவர்கள் மீது கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளேன் என தெரிவித்தார்.

என்னுடைய மருமகனும் அந்த பெண்ணும் இணைந்து ஏதோ ஒரு தொழில் செய்து உள்ளனர். அதற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டுக்கொண்டு உள்ளன. இந்நிலையில் அவர்களுக்குள் உள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அதற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது என்று கூறினார்.

பின்னர், கோவை புலியகுளம் காவல் நிலையத்தில் உங்கள் மருமகன் உட்பட மூன்று பேர் மீது ரத்தக் காயங்களை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உட்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு ? யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் கிடையாது. அதை என் மருமகன் நீதிமன்றத்தில் சந்திப்பார் என கூறினார்.

உங்கள் பேட்டியில் ஆரம்பித்ததிலிருந்து நீங்கள் உங்களை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறீர்கள் உங்கள் மருமகன், மகள் மீது குற்றம் இல்லை என்கிறீர்களா? என்று கேட்டதற்கு, நான் 10 வருடங்களாக அரசியல் சம்பந்தமாக சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறேன். கோவையில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. என் மகள், மருமகனுக்கு அந்தப் பெண்ணிற்கும் என்ன தொடர்பு இருந்தது, அவர்களுடைய தொழில் ரீதியான ஒப்பந்தம் என்ன செய்து இருந்தார்கள் என்பது குறித்து எல்லாம் எனக்கு தெரியாது.

அதேசமயம், யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூறிக் கொள்கிறேன். நான் அரசியலிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, நான் மிகவும் தூய்மையானவன் என மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு கோவை தங்கம் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...