திருப்பூர் அருகே பாறைக்குழியில் மீன்பிடிக்கச் சென்ற சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி பலி!

திருப்பூர்: திருப்பூர் அருகே பாறைக்குழியில் மீன்பிடிக்கச் சென்ற சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் அருகே பாறைக்குழியில் மீன்பிடிக்கச் சென்ற சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன்கள் சத்யா(13), குமரன்(11). பள்ளி மாணவர்களான இருவரும் வீட்டின் அருகேயுள்ள பாறைகுழிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் சிறுவர்களை தேடி பார்த்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவர்கள் சென்ற சைக்கிள் மற்றும் அவர்களது உடைகள் பாறைகுழி அருகே இருந்துள்ளது. இதனையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பாறைகுழியிலிருந்து சிறுவர்களை இருவரையும் இறந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் கூறுகையில், சிறுவர்கள் மீன்பிடிக்க சென்ற போது, தூண்டில் மாட்டியிருந்திருக்கலாம், அதை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதில் இருவரும் இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...