வால்பாறையில் தொழிலாளியை தாக்கி கொன்ற கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!

கோவை: வால்பாறையில் தொழிலாளியை தாக்கி கொன்ற கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் தொழிலாளியை தாக்கி கொன்ற கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள வில்லோனி எஸ்டேட்டில் பணியாற்றிய தொழிலாளி மோகன்ராஜ் (36) என்பவர் நேற்று முன்தினம் இரவு கரடி தாக்கி உயிரிழந்தார். அவருடைய உடல் வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ. அமீது, திமுக நகர பொறுப்பாளர் பால்பாண்டி மற்றும் நிர்வாகிகள், தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில் நிவாரண தொகையின் ஒரு பகுதியான ரூபாய் 50 ஆயிரத்தை உறவினர்களிடம் வழங்கினர்.

மேலும் வில்லோனி எஸ்டேட்டில் கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உலாவரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர். கரடியை பிடிப்பதற்காக கூண்டுக்குள் பழங்களை வைத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....