கோவை: கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் ஊரடங்கிற்குப் பிறகு தொடர்ந்து வழிப்பறி, வீட்டை உடைத்து திருட்டு, பிட்பாக்கெட் போன்ற திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்திற்குக் குறைந்தபட்சம் நான்கு வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால், காவல்துறையினர் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இருந்தபோதும், கோவையில் வீட்டை உடைத்துக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நின்றபாடில்லை. கோவை கருப்பராயன் பாளையம், ராமசாமி நகர், பீளமேடு பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ் வயது 45. இவர் பீளமேடு பகுதியில் உள்ள ராவுத்தர் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்குச் சென்றுவிட்டு, இன்று வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோ அலங்கோலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை, பட்டுப்புடவைகள், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் வந்து ஆய்வு செய்த போலீசார், இந்த திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், சம்பவ இடத்திற்குக் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகள் ஆய்வு செய்யப்பட்டு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இரவு ரோந்து பணியில் இருக்கக்கூடிய போலீசாருக்கு வீட்டை உடைத்து திருடக் கூடிய குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் கொடுத்து அனுப்பி உள்ளதாகவும், அவர்களைக் கண்காணிக்கும்படி உயர் காவல் அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.