கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்ன்செல்வம் ஆப்வு மேற்கொண்டார்.
அப்போது வேளாண் பல்கலைக்கழகத்தின் பாரம்பரியம் மிக்க ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்தைப் பார்வையிட்டு மரக்கன்று நட்டுவைத்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட வேளாண்மைத் தொழில்நுட்பங்கள், மத்தியப்பண்ணை மற்றும் மண்புழு உரத் தயாரிப்புகளைப் பார்வையிட்டார்.
இதனையடுத்து கால்நடைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்த செறிவூட்டப்பட்ட தீவன குருணைகள் (தீவனப்புல் கட்டி) தயாரிக்கும் இயந்திரத்தைத் துவக்கி வைத்தார்.
ஆய்வின் தொடாச்சியாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பல்கலைக்கழக பழத்தோட்டப் பண்ணையைப் பார்வையிட்டார்.

பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆளில்லா விமானம் மூலம் பயிர் வளர்ச்சியூக்கிகள் மற்றும் பூச்சி மருந்து தெளிக்கும் விமானம் பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.
மேலும், வறட்சியைத் தாங்கி வளரும் புதிய பழ ரகங்களின் ஆராய்ச்சித்திடலை ஆய்வு செய்தார்.
இறுதியாக, பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட தாவரவியல் பூங்காவினை பார்வை செய்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் சி. சமயமூரத்தி, இ.ஆ.ப., வேளாண் இயக்குநர் எ.அண்ணாதுரை, இ.ஆ.ப., வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை ஆணையர் முனைவர். எம். வள்ளலார், இ.ஆ,.ப., தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்கள் துறை இயக்குநர் முனைவர். ஆர். பிருந்தாதேவி, இ.ஆ.ப., முதன்மைப் பொறியியலாளர் (வேளாண்மை) ஆர். முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். நீ. குமார் மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.