கோவை விமான நிலையத்தில் திருப்பூர் தொழிலதிபரிடம் இருந்து 0.25mm 92 லைவ் தோட்டாக்கள் பறிமுதல்

கோவை: இன்று கோவை விமான நிலையத்தில், திருப்பூர் தொழிலதிபரிடம் இருந்து 0.25mm 92 லைவ் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: இன்று கோவை விமான நிலையத்தில், திருப்பூர் தொழிலதிபரிடம் இருந்து 0.25mm 92 லைவ் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலைய பாதுகாப்பு பணியில், மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், கலால் பிரிவு போலீசார், மற்றும் விமான நிலைய போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திருப்பூரைச் சேர்ந்த சசிகுமார் என்ற தொழில் அதிபர் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது, அவர் வைத்திருந்த கைப்பையைச் சோதனை செய்த போது, அதில் 92 பிஸ்டல் தோட்டாக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அதன் அளவு 0.25mm ஆகும்.

உடனடியாக, சி.ஐ.எஸ்.எப் போலீசார் அதை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் கொடுக்கவே, போலீசார் அவரை பீளமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால், இன்று காலை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

எதற்காக 92 தோட்டாக்களை மொத்தமாக எடுத்துச் சென்றார்? இதற்கு எப்படி அனுமதி பெற்றார்? என்பது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....