கோவைக்கு 18,500 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்து இறங்கியது - சுகாதாரத்துறை தகவல்

கோவை: கோவையில் நீடித்து வரும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால், பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், சற்று முன்பு கோவைக்கு 18,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து இறங்கியுள்ளதாக, கோவை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் நீடித்து வரும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால், பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், சற்று முன்பு கோவைக்கு 18,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து இறங்கியுள்ளதாக, கோவை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் ஊரக பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து மாநகராட்சிப் பகுதியில் நேற்றும் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் முகாம் நடத்தப்படவில்லை. இதனால், ஏற்கனவே ஒரு தவணை தடுப்பூசி போட்டவர்கள், அடுத்த தவணை தடுப்பூசியை அந்த குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்திக்கொள்ள முடியாத நிலை நீடித்து வருகிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சென்னையில் இருந்து 18,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இனி வரும் நாட்களில் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 56 ஆயிரத்து 782 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....