கோவையில் குட்கா மற்றும் புகையிலை கடத்தல்: 3-வடமாநில வாலிபர்கள் கைது!

கோவை: கோவையில் மோட்டார் சைக்கிள் மூலமாகத் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கடத்திய வடமாநில வாலிபர்கள் 3 பேரை போலீஸ் சோதனையில் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் மோட்டார் சைக்கிள் மூலமாகத் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கடத்திய வடமாநில வாலிபர்கள் 3 பேரை போலீஸ் சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் மாநகர ஆணையர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பான்மசாலா உட்பட அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யக் கூடியவர்கள் மீது கைது நடவடிக்கை மற்றும் கடைக்கு சீல் வைக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஆங்காங்கே தனிப்படைகள் அமைத்துச் சிறப்புச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திருட்டுத்தனமாக விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகள் என்ன செய்வது என புரியாமல் பல்வேறு கோணங்களில் புகையிலைப் பொருட்களைக் கடத்தி விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று போலீஸ் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர்கள் சோதனை செய்தபோது அவர்கள் புகையிலை கடத்திக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்கள் புகையிலை எடுத்துவந்த குடோன் உட்பட அனைத்தும் சோதனை செய்யப்பட்டு 550 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. கோவை புறநகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கருமத்தம் பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சோமனூர் அருகே மயான பகுதியில் கருமத்தம் பட்டி போலீஸ் சப்-இஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 பைகளுடன் வந்த வட மாநில வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் அந்த பைகளில் குட்கா பாக்கெட்டுகளை விற்பனைக்காகக் கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்திர குமார் (24) என்பதும், அந்த பொருட்களை அதே பகுதியில் உள்ள குடோனில் இருந்து எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அதிரடியாக அந்த குடோனுக்கு சென்றனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 550 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அந்த குடோன் சோமனூரில் உள்ள மகா சிவசக்தி ஜெனரல் ஸ்டோர்ஸ் உரிமையாளருக்குச் சொந்தமானது என்பதும் அதன் உரிமையாளர் மோதிலால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குட்கா பொருட்களைப் பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் அந்த குடோனில் வேலை பார்த்து கொண்டிருந்த உத்தம்குமார் (21), பிரேம் சிங் (20) மற்றும் ஜித்தேந்திர குமார் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...