கோவை: கோவை அருகே பட்டப்பகலில் வீட்டை உடைத்து 10 பவுன் நகை ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர்.

கோவை அருகே பட்டப்பகலில் முதியவர் தனியாக இருந்த வீட்டைக் கதவை உடைத்து உள்ளே சென்று பத்து பவுன் நகை ரொக்கம் உட்படப் பொருட்களைத் தேடிச் சென்று ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, கருமத்தம் பட்டி அடுத்த சோமனூர் கருணாம்பிகா மில் ரோடு, தெற்கு தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி (82) இவரது மனைவி கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு காலமானார்.
இந்நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது இந்நிலையில் கிருஷ்ணசாமி தனியாக வசித்து வருகிறார்,நேற்று காலை சொந்த வேலை காரணமாகக் கோவை சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அவர் பூட்டிய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக கிருஷ்ணசாமி கருமத்தம் பட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தகவலின் பேரில் கருமத்தம் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கருமத்தம் பட்டி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரோக்கிய தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 10 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது, தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளைச் சோதனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பூட்டிய வீட்டின் கதவை உடைத்துக் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்துத் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.