சுய உதவிக்குழுக்கள் அதிகரிக்கப்படும்- கோவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜ.பெரியசாமி பேட்டி

கோவை: சுய உதவிக்குழுக்கள் அதிகரிக்கப்படும் எனவும், சிறப்பாகச் செயல்படும் சுய உதவி குழுவினர் மற்றும் படித்த இளைஞர்களுக்குத் தவறுகளுக்கு இடமளிக்காமல் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.



கோவை: சுய உதவிக்குழுக்கள் அதிகரிக்கப்படும் எனவும், சிறப்பாகச் செயல்படும் சுய உதவி குழுவினர் மற்றும் படித்த இளைஞர்களுக்குத் தவறுகளுக்கு இடமளிக்காமல் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் கூட்டுறவுத் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கொரொனா நிதி ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்படாமல் இருப்பதாகவும் இந்த மாத இறுதிக்குள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.



விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் கடந்த ஆண்டு 9500 கோடி மட்டுமே வழங்கிய நிலையில் இந்த ஆண்டு 11500 கோடி பயிர்க் கடனை வழங்க முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலையினை பார்வையிட்டதாகவும், நியாய விலை கடைகளில் தமிழகம் முழுவதும் சேல்ஸ் மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது எனவும், நியாய விலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு எல்லா வகையிலும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும் எனவும், இந்த துறை முதல்வர் இடும் ஆணையை மக்களிடம் கொண்டு செல்லும் எனவும் தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறையின் மூலமாகச் செயல்படும் சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கையினை 55 ஆயிரத்தில் இருத்து ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழு சிறப்பாகச் செயல்படும், படித்த இளைஞர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எந்த தவற்றுக்கும் இடமளிக்காமல் வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

குடும்ப அட்டை இல்லாமல் இருந்தவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை கிடைக்க உணவு துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள 4451 விவசாயக் கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ள விதி மீறல்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது எனவும் வரும் 31 ம் தேதி அந்த ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் அதில் உள்ளவை குறித்து தெரிவிக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

வேப்பம்புண்ணாக்கு தயாரிப்பை அதிகரிக்க உதிரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர், தரமான விதைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

நீண்டகாலமாக ஒரே கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள பணியாளர்களை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், திமுக ஆட்சியில் கூட்டுறவு தேர்தல் முறைப்படி நடக்கும் எனத் தெரிவித்தார்.

இதில் வனத்துறை அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....