கோவை மாவட்ட எஸ். பி அதிரடி நடவடிக்கை..! புகையிலை, மது பாட்டில், லாட்டரி விற்பனை செய்த 14 பேர் கைது

கோவை - கோவையில் அதிகரித்து வரும் புகையிலை, மது பாட்டில்கள், லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க மாவட்ட எஸ். பி செல்வநாகரத்தினம் தலைமையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



கோவை - கோவையில் அதிகரித்து வரும் புகையிலை, மது பாட்டில்கள், லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க மாவட்ட எஸ். பி செல்வநாகரத்தினம் தலைமையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் மது, புகையிலை, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கீழ்க்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மது வழக்குகள்

பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 3

கைது செய்யப்பட்ட நபர்கள்: 3

பறிமுதல் விபரம்: 54 பாட்டில்கள்

புகையிலை பாக்கெட் வழக்குகள்

பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 8

கைது செய்யப்பட்ட நபர்கள்: 8

பறிமுதல் விபரம்: 84 பாக்கெட்

லாட்டரி சீட்டு வழக்குகள்

பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 3

கைது செய்யப்பட்ட நபர்கள்: 3

பறிமுதல் விபரம்: ரூபாய் 400/- மற்றும் இரண்டு செல்ஃபோன்.

மேற்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் காக்கப்படும் என்று தெரு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...