மறைந்த தமிழக முதல்வருக்கு குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் இதய அஞ்சலி

குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பாக மறைந்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுந்தராபுரம் தக்காளி  மார்க்கெட்  மைதானத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் தலைவர் தீபம் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



பின்னர், அவர் பேசுகையில்; தமிழகத்தில் 6 முறை முதல்வராக இருந்த ஒரே பெண்மணி ஜெயலலிதா, அவர் மறைந்தது தமிழக மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக கட்சியின் தொண்டர்கள் கண்ணீர் கடலில் வீழ்ந்துள்ளனர். குறிச்சி குளம் இயக்கம் சார்பில் தண்ணீருக்கு பல்வேறு செயல்கள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் தண்ணீர்க்காக மழை நீர் சேமிப்பு திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டார். மேலும் முல்லை பெரியார், காவேரி போன்ற தண்ணீர் பிரச்சனைகளுக்கு பல்வேறு வழக்குகள், கடிதங்கள் மூலமாகவும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க செய்தார். இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றும் அவர் குறிப்பிட்டார்.



பின்னர், மறைந்த தமிழக முதல்வருக்கு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர்கள் மணிகண்டன், கனகராஜ், ஆறுமுகம் துணை தலைவர் சுரேஷ், விவசாயிகள் சங்கம் வலுக்கு பாறை பாலு மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.



Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...