தமிழக முதல்வரின் மறைவையொட்டி கோவையில் கண்ணீர் அஞ்சலி!


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் நேற்று இரவு (டிச. 6) சுமார் 11.30 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.



கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெருட்சோடியே காணப்படுகின்றது. பள்ளி, கல்லூரிகளுக்கும், பெரும்பாலான அலுவலகங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் போக்குவரத்து குறைவாகவே காணப்படுகிறது. சிறிய மள்ளிகைக் கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இருப்பினும் அத்யாவசியத் தேவைகளான மருந்துக் கடை, பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ் ஆகியவை செயல்பட்டு வருகிறது.



இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை விரைந்தனர். மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உயிரிழந்த தமிழக முதல்வருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில், காந்திபுர பேருந்து நிலையத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஜெயலலிதாவின் உயிரிழப்பையொட்டி ஒப்பாரிவைத்து அஞ்சலி செலுத்திவந்த நிலையில் இரண்டு பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்ட மற்ற அதிமுக-வினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.



Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...