கோவை: கோவை அடுத்த கோயில்பாளையம் பகுதி காட்டுப் பகுதியில் ஓர் ஆண் பிணம் கிடந்தது. போலீஸார் அதை எடுத்து விசாரணை செய்ததில் மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் இரண்டு நாட்களுக்கு முன்பு கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

கோயில்பாளையம் குரும்பபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் காட்டுப்பகுதியில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக கோயில்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஆண் பிணத்தை கைப்பற்றி பரிசோதனை செய்தனர். அதில் கோவை குரும்பபாளையம் வடக்கு வீதியைச் சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் கணேசன்(42) கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வருவதும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக இவரது மனைவி இவருடன் குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து சென்றதும் இவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, கோயில்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.