கோவை: இறப்பு சான்று, வாரிசு சான்றிதழ் பெற, ரசீது வழங்க சுடுகாட்டில் ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என பொது மக்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமையில் வந்து கிராம மக்கள் மனு அளித்தனர். அதில் கணபதியை அடுத்த மூர் மார்க்கெட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த யாராவது இறந்தால் சின்னச்சாமி நகர் சுடுகாட்டில் புதைத்து அல்லது எரியூட்டி வருகிறோம். அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு சென்றால் அதிகாரிகள் சுடுகாட்டு ரசீது கேட்டு எங்களை அலைக்கழிக்கிறார்கள். இதனால் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்படுகிறோம். இந்த சுடுகாட்டை எங்கள் சமூகத்தினர் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, இந்த சுடுகாட்டிற்கு ஊழியர் ஒருவரை நியமித்து இறந்தவரை புதைத்தோ அல்லது எரித்தோ அதை பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பம் செய்தால் இறப்பு சான்றிதழ் வழங்க ஆவன செய்வதாகவும் சுடுகாட்டுக்கு ஊழியரை நியமிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.