கோவை தேன்கனிக்கோட்டையில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம்... 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தீர்மானம்..!

கோவை: தேன்கனிக்கோட்டையில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும்... வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: தேன்கனிக்கோட்டையில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும்... வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேன்கனிக்கோட்டையில் உழவர் தினம் முன்னிட்டு, தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் கோணப்பன் தலைமை வகித்தார். இணை செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 1970 முதல், 1980 வரை, இலவச மின்சார போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச மின்சார திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயம் சார்ந்த கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மேற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...