கோவை: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபெறும் தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(06/07/2021 செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.
இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 பேர், ஆடவருக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 பேர், கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் 2 ஆடவா், 3 மகளிர் ஆகியோர் உள்ளார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
இவர்களைத் தவிர ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இரு தமிழக வீரர்களும் இந்தியத் தடகள அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான அணியில் இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது.
இந்தநிலையில், இவர்கள் 5 பேருக்கும் தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு செல்லும் 7 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.