கோவை: கோவையில் ஹோட்டல் ஒன்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு இருந்தது. அதை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலமாக அகற்றினர்.

கோவை காந்திபார்க் சுக்ரவார்பேட்டை பகுதியில் பால தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயிலுக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. இந்தநிலையில், கோயிலுக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான இடத்தை ஆக்கிரமித்து சிறுவாணி உணவகம் என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வந்தது. கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் ஆக்கிரமிப்பு செய்யபட்ட இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உணவகத்தை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் தெற்கு தாசில்தார் முன்னிலையில் ஊழியர்கள் இன்று இடித்து இடம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படுவதன் காரணமாக சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.