'பணியின் போது உங்கள் பாதுகாப்பிலும் கவனம் வேண்டும்' - முன்களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுரை

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌, மத்திய மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜகோபால்‌ சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌, மத்திய மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜகோபால்‌ சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.67, 69க்குட்பட்ட இராமநாதபுரம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகம்‌ மற்றும்‌ நஞ்சுண்டாபுரம்‌ நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ இன்று (06.07.2021) ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ இராமநாதபுரம்‌ சுகாதார ஆய்வாளா்‌ அலுவலக வளாகத்தில்‌ முன்களப்பணியாளர்களிடம்‌ கொரோனா தடூப்புபபணிகளை குறித்து அறிவுறுத்தினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்புப்பணிகளில்‌ ஈடுபடும்‌ முன்களப்பணியாளர்களின் பணி மிக முக்கிய பணியாகும்‌. இப்பணிகளை மிகவும்‌ சிறப்பாக செய்திட வேண்டும்‌. பணியின் போது, வீடு தவறாமல்‌ முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌, கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திட வேண்டும்‌ என அறிவுறுத்தினார்.



குறிப்பாக, வீடூ வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல்‌, இருமல்‌, மூச்சுத்தினறல்‌, உடல்‌ சோர்வு, உடல்‌ வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன்‌ அளவு, ஆகியவற்றை கண்டறிந்து அதன்‌ விபரங்களை குறித்து கோவிட்‌-19 கள ஆய்வு பதிவேடுகளில்‌ முறையாக பதிவு செய்ய வேண்டும்‌ என்றார்.



தொடாந்து, வார்டு எண.75க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம்‌ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌, கர்ப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்கு போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, சிகிச்சை முறைகள்‌ குறித்தும்‌, தாய்‌ சேய்‌ நல பாதுகாப்பு அட்டையில்‌ பதிவு செய்து, பராமரிப்பது குறித்த பதிவேடுகளையும்‌, புற நோயாளிகளின்‌ பதிவேடு மற்றும்‌ டாக்டா்‌.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில்‌ காப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார் பின்னர்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.72க்குட்பட்ட வ.ஊ.சி பூங்காவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, மாநகரப்பொறியாளர்‌, ஆ.லட்சுமணன்‌, நகர்நல அலுவலா்‌ மரு.ராஜா, கிழக்கு மண்டல உதவி ஆணையாளார், முருகன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்‌.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...