கோவையில் புகைப்படக் கருவி விற்பனை நிலையத்தில் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான கேமிரா நூதன முறையில் திருட்டு..!

கோவை: புகைப்படக் கருவி விற்பனை நிலையத்தில் இரண்டரை லட்சம் மதிப்பிலான கேமிரா நூதன முறையில் திருடப்பட்டுள்ளது.


கோவை: புகைப்படக் கருவி விற்பனை நிலையத்தில் இரண்டரை லட்சம் மதிப்பிலான கேமிரா நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிராஸ்கட் ரோடு வடகோவை மேம்பாலம் அருகே பிரேம்சந்தர் என்பவருக்கு சொந்தமாக லட்சுமி ஃபோட்டோ சென்டர் என்னும் புகைப்பட கருவிகள் விற்பனை நிலையம் மற்றும் சர்வீஸ் சென்டர் உள்ளது. இந்த கடையில், கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி அங்கு கேமரா வாங்குவதற்காக வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவர் பேனாசோனிக் சிக்மா என்னும் கேமராவை கேட்டுள்ளார். பின்னர், அதை வாங்கிக் கொண்டு கேமராவை சோதித்துப் பார்ப்பதற்காக கடையை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை பாலசுப்பிரமணியம் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், அந்த நபர் அங்கிருந்து வேகமாக ஓடிச்சென்று கீழே இரு சக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி தயாராக இருந்த அவருடைய நண்பருடன் அங்கிருந்து கேமராவை திருடிக்கொண்டு சென்று விட்டார்.

பின்னர், இது சம்பந்தமாக பாலசுப்பிரமணியன் என்பவர் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் இந்த திருட்டு சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இதனைய தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கேமராவை நூதனமாக திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...