கோவை ஆலந்துறை பேரூராட்சியை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்... திடீர் பரபரப்பு..!

கோவை: ஆலந்துறை பேரூராட்சிக்குட்பட்ட 10 தூய்மை பணியாளர்களை திடீரென வேலை இழப்பு செய்ததால், இன்று ஆத்திரமடைந்த அவர்கள் ஆலந்துறை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: ஆலந்துறை பேரூராட்சிக்குட்பட்ட 10 தூய்மை பணியாளர்களை திடீரென வேலை இழப்பு செய்ததால், இன்று ஆத்திரமடைந்த அவர்கள் ஆலந்துறை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் உட்பட புறநகர் முழுவதும் கடந்த 5 மாதங்களாக தூய்மை நிரந்தரப் பணியாளர்கள், மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என அனைவரும் கொரோனா சிறப்பு தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு அவர்களையும் முன் களப்பணியாளர்களாக அறிவித்துள்ளது. இந்தநிலையில், ஆலந்துறை பேரூராட்சிக்குட்பட்ட 10 தூய்மைப் பணியாளர்களை திடீரென வேலை இழப்பு செய்ததால் இன்று ஆத்திரமடைந்த அவர்கள் ஆலந்துறை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து, மாலை வரை போராட்டம் நீடித்தது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஊராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பாக, கலைந்து சென்றனர். முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் 10 பேர் திடீரென வேலை இழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...