கோவையில் தொடரும் வாகன திருட்டு; போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் தொடர் புகார் காரணமாக, போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் தொடர் புகார் காரணமாக, போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு, கோவை உக்கடம் அருள் நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரின் மனைவி ரக்ஷிதா, தனது வீட்டின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார் பின்பு, காலையில் எழுந்து பார்த்தபோது ஸ்கூட்டர் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல, பிற சம்பவங்கள்:

காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சோலை என்பவரின் மகன் அரங்கநாதன், தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக் காணாமல் போனது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல, ராம்நகர் ராஜாஜி வீதி பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் மனோஜ் குமார், தனது கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

மாதம்பட்டி பழனியாண்டவர் புதூர் பகுதியைச் சேர்ந்த சந்தானதுரை என்பவரின் மகன் நாகேந்திரன், திருச்சி சாலை அரசு மருத்துவமனை பகுதியில் தனது பைக்கை நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த பொழுது பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மன் குளம் ராஜிவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரின் மனைவி உஷாராணி. இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஸ்கூட்டரை காணவில்லை என ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும், ஈச்சனாரி ஐயப்பா நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் குட்டி ராஜ், அதே பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு இரவு நிறுத்தி விட்டுச் சென்ற பைக் மறுநாள் காலையில் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இவ்வாறு நகரின் பல்வேறு இடங்களில் வாகனங்களை திருடி வரும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...