கோவையில் குளங்களை அழகுப்படுதுதல் என்ற பேரில் உயிர்ச்சூழலுக்கு பெறும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் தலைமையில் ஆய்வு

கோவை: திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் அதன் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் கோவை மாநகர் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு குளங்களில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.


கோவை: திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் அதன் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் கோவை மாநகர் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு குளங்களில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.



ஆய்வில், குளங்களின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குளத்தின் பரப்பளவு பெரிய அளவில் சுருங்கி உள்ளதும், பல இடங்களில் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாகக் குளங்களுக்குள் செலுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"தமிழக முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தேர்தலுக்கு முன்னரே கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட "விடியலை நோக்கி ஸ்டாலின்" பயணத்திலும், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்கிற குறைதீர்ப்பு திட்டத்தின் வழியாகவும், தேர்தல் பிரச்சாரத்திலும் சொல்லப்பட்டதைப் போல, கோவை நகரின் குளங்கள் மற்றும் நீர் வள ஆதாரங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.



இன்று (ஜூலை 2) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணி சார்பாக எனது தலைமையில் கழக சுற்றுச்சூழல் அணி உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கோவையைச் சேர்ந்த அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து கோவையின் முக்கிய குளங்களான வாலாங்குளம், குறிச்சிக்குளம், பெரிய குளம், செல்வபுரம் குளம் மற்றும் தடாகம் குளம் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் குளங்களின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குளத்தின் பரப்பளவு பெரிய அளவில் சுருங்கி உள்ளதும், பல இடங்களில் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாகக் குளங்களுக்குள் செலுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.



மேலும், குளங்களில் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு எதிராக இருக்கும் வகையில் கரைகளுக்கு கான்கிரீட் போடுதல் உள்ளிட்ட தேவையற்ற பணிகளால் குளங்களின் உயிர்ச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கூறியவை, முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் இதனுடன் இன்னும் பல தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன.

கோவையில் உள்ள அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளின் படி, இக்குளங்களை ஆய்வு செய்து, இதன் அறிக்கையை தமிழக முதல்வர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டு குளங்களின் உயிர்ச்சூழல் மற்றும் பல்லுயிர்ப்பெருக்கம் பாதிக்கப்படாத வகையில் திருத்தங்கள் செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது சுற்றுச்சூழல் அணி மாநில துணைச்செயலாளர்கள் மணிசுந்தர், நாராயணமூர்த்தி, உசிலம்பட்டி அருண், செந்தில்குமார், கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...