திருப்பூர் அருகே முறைகேடாக தடுப்பூசி செலுத்தப்படுவதாக அனைத்து கட்சி சார்பில் சாலை மறியல்!

திருப்பூர்: திருப்பூர் அருகே முறைகேடாக தடுப்பூசி செலுத்தப்படுவதாக அனைத்து கட்சி சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே முறைகேடாக தடுப்பூசி செலுத்தப்படுவதாக அனைத்து கட்சி சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் அடுத்துள்ள மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் முறைகேடாக பிற நபர்களுக்கு மட்டும் செலுத்துவதாகவும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டு முறைகேடாக டோக்கன் விநியோகித்து தடுப்பூசி செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் நெருக்கம் மிகுந்த மங்கலம் ஊராட்சிக்கு குறைவான தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் மக்கள் நெருக்கத்தை கணக்கில் கொண்டு அதிக தடுப்பூசிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் - திருப்பூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து, உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த மங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அப்புறப்படுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.



பின்னர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் செவிலியர்கள் மீது விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...