கே.எம்.சி.எச் நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்படும் நிலத்தை மீட்டுத்தரக் கோரி காவல் ஆணையரிடம் புகார்


கோவை நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது நிலத்தினை கே.எம்.சி.எச் நிர்வாகத்தினர் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனை தடுத்த அவருக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் வெள்ளியன்று (இன்று) கோவை மாவட்ட காவல் ஆணையரைச் சந்தித்து மனு ஒன்றினை அளித்தார்.



இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் நஞ்சப்பன் கூறியதாவது:-

கடந்த 1991-யில் என்.ஜி.பி கல்லூரியின் பின்புறத்தில் உள்ள 68 சென்ட் இடத்தினை நான் வாங்கினேன். அப்போது கே.எம்.சி.எச் நிறுவனத்தினர் எங்களது இடத்தின் அருகே சுற்றுச் சுவர் கட்டத் துவங்கினர். அதில், கூடுதலாக சுமார் 10 சென்ட் அளவிலான இடத்தினை ஆக்கிரமிக்கும் வகையில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்றது.

இதுதொடர்பாக, பீளமேடு காவல் நிலையத்தில் புகாரும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, கே.எம்.சி.எச் சுற்றுச் சுவர் கட்டும் பணியை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தொடர்ந்து இந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டும் பணியினை மேற்கொள்ள மாட்டோம் என அப்பணியில் ஈடுபட்டிருந்தோரிடம் காவல் துறை சார்பில் எழுதியும் வாங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் அந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டும் பணியில் கே.எம்.சி.எச் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை நிறுத்தச் சொன்ன எனது மனைவி சரஸ்வதியை தகாத வார்த்தையில் திட்டி, எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

நாங்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து உழைத்து வாங்கிய இந்த இடத்தினை கேஎம்சிஎச் நிறுவனத்தில் பணிபுரியும் தண்டபானி, சிவகுமார், நல்லதம்பி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...