கோவை: கிணத்துக்கடவு தாலுகாவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் பெறப்பட்ட 23 மனுக்களில் ஆறு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள கிணத்துக்கடவு, வடசித்தூர், கோவில் பாளையம், ஆகிய மூன்று வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி, கடந்த இரண்டு நாட்களாக கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படாமல், இணையதளம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் மனுக்கள் பெறபட்டு வந்தது.
கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் அம்சவேணி ஜமாபந்தி அதிகாரியாக நியமிக்கப்பட்டு நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் மொத்தம் 23 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து பெறபட்ட மனுக்களில் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு ஆறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.