கோவை: தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் கோவை மாநகராட்சியில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் பெண் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம் கூறியிருப்பதாவது:
‘‘கோவை மாநகராட்சியில் சுகாதாரத் தூய்மைப் பணியில் 3500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இதில் சம அளவில் பெண் பணியாளர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மாநகராட்சியில் பணிபுரியும் பெண் தூய்மைப் பணியாளர்கள் வார்டு அளவில் உள்ள அலுவலர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆட்படுத்தப்படுவது, துன்புறுத்தப்படுவது மற்றும் அவமானப்படுத்தப்படுவது குறித்து புகார்கள் எழுகின்றன.
மாநகராட்சி 97-வது வார்டு, 11-வது வார்டுகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் இருவர் வார்டு அளவிலான அலுவலர்கள் மீது கடந்த வாரத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, மாநகராட்சியில் பணிபுரியும் பெண் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். பெண்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.