கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் மற்றும் தொழு நோயாளிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு நாள்தோறும் 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் இன்று புரவிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் மற்றும் தொழுநோயாளிகள் என 35 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, வடுகபாளையம் துணை சுகாதார நிலையம், நாச்சிமுத்து பிரசவ விடுதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்று தடுப்பூசி செலுத்துக் கொள்கின்றனர்.