கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ கொரோனா தடுப்புப்‌ பணிகள்‌, தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ கொரோனா பெருந்தொற்றுத் தடுப்புப்‌ பணிகள்‌, தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ கொரோனா பெருந்தொற்றுத் தடுப்புப்‌ பணிகள்‌, தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கிழக்கு, வடக்கு மற்றும்‌ மத்திய மண்டலப் பகுதிகளில்‌ கொரோனா பெருந்தொற்றுத் தடுப்புப்‌ பணிகள்‌, தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப.,இன்று(25.06.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.54க்குட்பட்ட மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலக வளாகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ களப்பணியாளாகளிடம்‌ தெரிவிக்கையில்‌, ‘‘களப்பணியாளா்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று சளி, காய்ச்சல்‌, இருமல்‌ பரிசோதனை, உடல்‌ வெப்பநிலை, ஆக்சிஜன்‌ அளவை கண்டறியும்‌ பணிகளை மேற்கொள்ளும்போது பரிசோதனையின்‌ விவரங்கள்‌ குறித்து கோவிட்‌-19 கள ஆய்வுப்‌ பதிவேடுகளில்‌ பதிவிட வேண்டும்‌. பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம்‌ அணிந்தும்‌, கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திடவும் வேண்டும்‌. தடுப்பூசி போடாதவர்கள்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌'' என தெரிவித்தார்.



தொடர்ந்து, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.72, காட்டூர்‌ பகுதியில்‌ செல்லப்பகவுண்டா்‌ வீதி சாலையோரங்களில்‌ உள்ள குப்பை மேடுகளை பொக்லைன்‌ இயந்திரம்‌ கொண்டு தூய்மைப்பணியாளர்கள்‌ மூலம்‌ குப்பைகளை அப்புறப்படுத்தி, வாகனங்களில்‌ ஏற்றிச்செல்லும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ (Mass Cleaning) நடைபெற்றுவருவதை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்களிடம்‌ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிக சிறப்பாக செய்திட வேண்டும்‌, நேரம்‌ தவறாமல்‌ வருகை புரிந்திட வேண்டும்‌. அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌. அனைவரும்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌ என அறிவுறுத்தினார்.



தொடர்ந்து, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.28க்குட்பட்ட சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்‌ ரூ.56 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ கட்டடம்‌ கட்டப்பட்டு வருவதையும்‌, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.36க்குட்பட்ட காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்‌ ரூ.77.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ கட்டடம்‌ கட்டப்பட்டுவரும்‌ பணிகளை ஆய்வு செய்து, கட்டடங்களின்‌ உட்கட்டமைப்பு வசதிகள்‌ சரியான அளவில்‌ கட்டப்பட்டு்ள்ளதா என அளவு நாடா மூலம்‌ ஆய்வு செய்த பின்‌, அப்பள்ளிகளில்‌ வகுப்பறைகள்‌, குடிநீர்‌ மற்றும்‌ கழிப்பிட வசதிகள்‌ குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தொடா்புடைய அலுவலர்களிடம்‌ மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.28க்குட்பட்ட சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்‌ கருத்தாய்வு (Smart Class) மையத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ பார்வையிட்டார். அப்போது, மாநகரப்பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, பள்ளி தலைமையாசிரியை ஆகியோர்‌ உடனிருந்தனர்.



இந்த ஆய்வுகளின்போது, மாநகரப்பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ சிவசுப்பிரமணியம்‌, செயற்பொறியாளர்‌ திருமதி பார்வதி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்‌ பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்‌.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...