கோவை: வால்பாறை அருகே சேற்றில் சிக்கிய காட்டெருமையை கயிறு கட்டி வனத்துறையினர் மீட்டனர்.
கோவை: வால்பாறை அருகே சேற்றில் சிக்கிய காட்டெருமையை கயிறு கட்டி வனத்துறையினர் மீட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சவாராங்காடு எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் 23வது காட்டில் சேற்றில் காட்டெருமை ஒன்று உடல் நலக்குறைவால் எழுந்து நடமாடமுடியாமல் படுத்துக்கிடந்துள்ளது.
இதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட அலுவலர் ஜெயச்சந்திரனுக்கு தகவல் அளிக்கப்பட்டு அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர். உடல்நலக்குறைவால் படுத்திருந்த காட்டெருமையை பார்த்தபோது அந்த காட்டெருமை வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அறிந்து அதுபற்றிய தகவலை கால்நடை மருத்துவருக்குத் தெரிவித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
மேலும், சேற்று பகுதியில் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் செல்வதால் காட்டு எருமை மீட்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், இன்று வனத்துறையினர் வனவர் முனியாண்டி தலைமையில் வனத்துறையினர் முத்துராஜ் ரஞ்சித் ஆகியோர்கள் குழு காட்டெருமையை கயிறு கட்டி மீட்கும் பணி 2 மணி நேரத்துக்கு மேலாக ஈடுபட்டனர்.
பின்னர், மனஎஸ்டேட் தொழில்லர்களை வரவழைத்து 10க்கும் மேற்பட்டவர்கள் காட்டு எருமையை சேற்றில் இருந்து மீட்டு கரையில் சேர்த்தனர்.

பின் உடல் நலம் குன்றி காணப்படுவதால் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.