கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தலைமையில் இன்று 24.06.2021 மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
‘‘கொரோனா பெருந்தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்குத் தெரியப்படுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட விவரங்களை மாநகராட்சியின் https://covid.ccmc.gov.in/ccmc/bookingintimation என்ற இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடம் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், நுழைவு வாயிலில் கிருமி நாசினி திரவம் வைத்து அனைவரின் கைகளையும் சுத்தம் செய்து அனுமதிக்க வேண்டும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது கலந்து கொள்பவர்கள் அனைவரையும் சமூக இடைவெளியுடன் அமரவும் மண்டப உரிமையாளா்கள் வலியுறுத்த வேண்டும்.
மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விவரங்களைக் கொண்டு மாநகராட்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என கள ஆய்வு மேற்கொள்வார்கள்'' என்று ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகர நல அலுவலர் மரு.ராஜா, சுகாதார அலுவலர் தூய்மை பாரத இயக்கம் திருமால், மற்றும் ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றின் உரிமையாளா்கள் கலந்து கொண்டனர்.