கலைஞரின் பாடலை இசைத்து நிவாரணம் கேட்கும் கோவை நாகஸ்வர கலைஞர்கள்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படி வாழ்வாதாரம் முடங்கிய கோவை நாகஸ்வரக் கலைஞர்கள் தங்களுக்கான நிவாரணம் கோரும் விதமாக கலைஞரின் பாடலை இசைத்து வருகின்றனர்.



கோவை: கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படி வாழ்வாதாரம் முடங்கிய கோவை நாகஸ்வரக் கலைஞர்கள் தங்களுக்கான நிவாரணம் கோரும் விதமாக கலைஞரின் பாடலை இசைத்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த 40 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கூலித்தொழிலாளர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. குறிப்பாக, கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் திருவிழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் தவில் மற்றும் நாகஸ்வர இசைக்கலைஞர்கள் வருவாய் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும், கோயில் திருவிழாக்களிலும் மேளம் இசைக்கும் கலைஞர்கள் கடந்த 40 நாட்களாக வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இதனால் அவர்கள் அன்றாட செலவுக்கு வழியில்லாமல் பரிதவித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கோவை சின்ன வேடம்பட்டியில் ஏராளமான இசைக்கலைஞர்கள் வசித்து வருகிறார்கள்.



இவர்கள் தங்களின் பரிதாப நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும், தமிழக அரசு நிவாரண உதவித்தொகை வழங்கக் கோரியும் இசைக்கலைஞர்கள் சிலர் தவில், நாகஸ்வரம் இசைத்து தங்களின் வாழ்க்கை நிலையை எடுத்துரைத்தனர்.



சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இவர்கள் இசையால் பல்வேறு பாடல்களைப் பாடினர்.

இதுகுறித்து இசைக்கலைஞர்கள் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் நாகஸ்வர கலைஞர்கள் நுற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காத நிலையில் வருவாய்க்கு வழியின்றி தவித்து வருகிறோம்.



இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஊரடங்கு நிலை நீடிக்கும் என்பது தெரியாததால் எங்களது எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. மக்களை மகிழ்விக்கும் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அரசு போதிய நிவாரணம் வழங்கி வாழ்வாதாரம் காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். “மக்கள் நலம் சிறக்க மேளம் அடிக்கிறோம் கொரோனாவால் சிக்கித் தவிக்கிறோம்“ என்று வருத்தி கலைஞர் கருணாநிதியின் ஓரு பாடலை வாசித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்றனர்.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...