கோவை: கோவை சூலூர் பகுதியில் தேயிலைப் பெட்டிக்கு நடுவில் புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்து கடத்தி வந்தவரை போலீஸார் குறிவைத்து கைது செய்து உள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூரில் நள்ளிரவு சூலூர் போலீஸார் இந்திராநகர் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸாரைப் பார்த்ததும் கர்நாடகா பதிவு எண் கொண்ட ஒரு வேன் அதி வேகமாக சென்றது. இதனையடுத்து அந்த வேனை போலீஸார் தங்களது வாகனத்தில் துரத்திச் சென்றனர். துரத்தி வரும் போலீஸாரைப் பார்த்ததும் டிரைவரும் அவரின் உதவியாளரும் வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.
அப்போது வேனில் இருந்த மற்றொருவர் போலீஸாரிடம் பிடிபட்டார். அவரை விசாரித்ததில் ராஜஸ்தான் மாநிலம் கண்ணூர் மாவட்டம் மண்டோவி நகரைச் சேர்ந்த மூலராம் 21, என்பது தெரியவந்தது. மேலும், வேனில் டீத்தூள் பெட்டிகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 658 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், அந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டது. வேனில் வந்த மூன்று பேர் மீது வழக்கு பதியப்பட்டு மூலராம் சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய வேன் டிரைவர் மற்றும் அவரது உதவியாளரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.