கோவையில் மாணவர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்ற நான்கு பேர் கும்பல் கைது..!

கோவை: கோவையில் தொடர்ந்து கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருட்கள் விற்று வந்த நான்கு பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் தொடர்ந்து கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருட்கள் விற்று வந்த நான்கு பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

கோவையில் போதைப்பொருள் மற்றும் போதை ஊசி அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக மாநகர் போலீஸ் கமிஷனருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். உதவி கமிஷனர் பிரேமானந்தன் தலைமையிலான போலீஸார் சாய்பாபா காலனி கோயில் மேடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது நான்கு வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் கோவை டி.வி.எஸ் நகரைச் சேர்ந்த பார்த்திபன், கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த ஜானகிராமன், குனியமுத்தூர் லவ்வி காடனைச் சேர்ந்த முகமது அப்சல் உடையாம் பாளையத்தைச் சேர்ந்த கபிலேஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரும் போதை மாத்திரைகள் விற்பதற்காக அங்கு நின்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 650 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. கைதான நான்கு பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவர் இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்று வருகின்றனர். இவர்கள் போதைக்குப் பயன்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகளை கோவையிலுள்ள ஒரு மெடிக்கல்ஸில் வாங்கியுள்ளனர். அங்கு பிரசவ வலிக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகளை 90 ரூபாய் கொடுத்து வாங்கி வந்து மாணவர்களுக்கு ரூபாய் 300-க்கு விற்றுள்ளனர். மேலும், கோவையில் போதைப் பொருளை விற்பதற்கு தங்களைப் போன்று இன்னும் சில கும்பல் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீஸார் மற்றவர்களையும் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...