கோவை: திருப்பூரில் இருந்து கோவைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த நான்கு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 950 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய் 1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை உட்பட 11 மாவட்டங்களில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், அண்டை மாநிலங்களிலிருந்து மதுவைக் கடத்தி அதிக விலைக்கு விற்பது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறது. இதேபோல் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து திருப்பூர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு குடோனில் 4,000 மது பாட்டில்கள் பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு வாலிபர்கள் மதுபாட்டில்களைக் காரில் கடத்தி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து திருப்பூர் போலீஸார் கோவை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, போலீஸார் திருச்சி ரோட்டில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் அருகே வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை செய்தபோது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் காரை சோதனை செய்தனர். அதில், 950 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த முத்துக்குமார் வயது 39, பிரேம் 26, கோபாலகிருஷ்ணன் 30, சூரியா 25, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் காரில் கடத்தி வந்த 950 மது பாட்டில்கள் மற்றும் பணம் ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.