வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி..!

கோவை: வால்பாறையில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களின் மனுக்களை பெட்டியில் பெற்றுக்கொள்ளப்பட்டது.


கோவை: வால்பாறையில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களின் மனுக்களை பெட்டியில் பெற்றுக்கொள்ளப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி கூட்டம் நடைபெற்றது. வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் மாவட்ட ஆய்வு குழு அதிகாரி துரைசாமி, வால்பாறை வட்டாட்சியர் ராஜன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் முத்து குமார் ஆகியோர் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டது.

மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பரமசிவம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். வால்பாறை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து, தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் வழங்கும் குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வேலை கால ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், அவர்களுக்கு சொந்த ஊரில் சொந்தமாக வீடுகள் இல்லாமலும் வயதான காலத்தில் மீண்டும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் சொந்தமாகக் குடியிருக்க வீடு அறிவிக்கவும், அரசு புறம்போக்கு நிலங்களை, அரசு கையகப்படுத்தி வீடு இல்லாதவர்களுக்கு இடம் வழங்கவும் அரசுக்கு மனு வழங்கினார்.



திமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், வால்பாறை நடுமலை, காஞ்சமலை, கருமலை, உருளிக்கள், வால்பாறை எம்ஜிஆர் நகர், வால்பாறை மருத்துவமனைப் பகுதி போன்ற இடங்களில் குடியிருப்புக்கு அருகில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்று மனு வழங்கினார்.



திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வம் வால்பாறை பகுதியில் அண்ணா நகர், காமராஜ் நகர், சோலையார் அணை பகுதி, ரொட்டிகடை பகுதிகளில் சுமார் 400 பேர்களுக்கு குடியிருப்புகளுக்கு பட்டா பரிந்துரை செய்த நிலையில், பட்டாக்களை வழங்காமல் உள்ளதால், பட்டாக்களை விரைவாக வழங்க வேண்டுமென்று அரசாங்கத்திற்கு மனு வழங்கினர்.

திமுக நகர துணைத் தலைவர் செந்தில், ‘‘தமிழ்நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதியில் பொதுவாக பிஎஸ்என்எல் தொலைதொடர்பு சேவை உள்ளது. இந்த சேவையால் போதுமான நெட்வொர்க் வசதி இல்லாமல் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வனப்பகுதி அருகேயும் தார்சாலையில் நின்றும் தோட்டப் பகுதியில் அருகிலும் ஆன்லைன் வகுப்புகள் படித்துக் கொண்டு வருகிறார்கள். போதுமான தொலைத் தொடர்பு பிஎஸ்என்எல் சேவை நெட்வொர்க் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நெட்வொர்க் வசதி நன்றாகக் கிடைக்க வேண்டும்'' என்று மனு வழங்கினார்.

இந்த மனுக்கள் வட்டாட்சியர் ராஜன் மற்றும் வருவாய் தீர்வாயம் சமபந்தி அலுவலர் துரைசாமி அவர்கள் முன்னிலையில் பெட்டியில் மனுக்களை அனுப்பினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...