கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரிசோதனை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு...!

கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் இன்று ஆணையாளர் பொதுமக்களிடம் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் இன்று ஆணையாளர் பொதுமக்களிடம் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.41-க்குட்பட்ட காந்திமா நகரில்‌ களப்பணியாளர்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல்‌, இருமல்‌, உடல்‌ வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ்‌ ஆக்ஸி மீட்டர் மூலம்‌ உடல்‌ ஆக்சிஜன்‌ அளவைக் கண்டறிதல்‌ ஆகிய பணிகள்‌ மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா இ.ஆ.ப., களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.55க்குட்பட்ட புலியகுளம்‌ சாலை பகுதியில்‌ சைபரஸ்‌ அபாரட்மென்ட்‌ குடியிருப்பில்‌ உள்ள வீடுகளிலிருந்து குப்பைகளை மக்கும்‌ குப்பைகள்‌, மக்கா குப்பைகள்‌ என தரம்‌ பிரித்து சேகரிக்கப்பட்டுவரும்‌ பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வாடு எண்‌.38-க்குட்பட்ட பீளமேடு பகுதியில்‌ திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரித்து வெள்ளலூர்‌ குப்பை கிடங்கிற்கு இடமாற்றம்‌ செய்யப்பட்டுவரும்‌ பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...