கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரிவோர் மற்றும் நோயாளிகள் அவர்களது உறவினர்களுக்கும் கோவை மாவட்ட அரிமா மற்றும் ஃபேரா அமைப்பினர் தினமும் உணவு வழங்கி வருகின்றனர்

கோவை: கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவர்களது உறவினர்கள் என தொடர்ந்து தினமும் சுமார் 300 பேருக்கு உணவு வழங்கி வரும் கோவை மாவட்ட அரிமா 324 பி.1 மற்றும் ஃபேரா (FAIRA) அமைப்பினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


கோவை: கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவர்களது உறவினர்கள் என தொடர்ந்து தினமும் சுமார் 300 பேருக்கு உணவு வழங்கி வரும் கோவை மாவட்ட அரிமா 324 பி.1 மற்றும் ஃபேரா (FAIRA) அமைப்பினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தினமும் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி பல்வேறு சிகிச்சை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து பரவி வந்த நிலையில், தமிழக அரசு நோய்த் தொற்றைக் கட்டுபடுத்த முழு ஊரடங்கு பிறப்பித்தது.

இந்தநிலையில், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவர்களது உறவினர்கள் என தொடர்ந்து தினமும் சுமார் 300 பேருக்கு உணவு வழங்கும் பணியை கோவை மாவட்ட அரிமா 324 பி.1 மற்றும் ஃபேரா (FAIRA) அமைப்பினர் முன்னெடுத்து செய்து வருகின்றனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரம் இலவச முகக் கவசங்கள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்குவதற்கான முகாம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் 240 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தத்தெடுத்து பராமரிப்பது மற்றும் செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கும் பணியையும் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், தொடர்ந்து 46 ஆவது நாளாக மருத்துவமனை வளாகத்தில் உணவு வழங்கும் பணி, கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 பி.1 மாவட்ட பி.ஆர்.ஓ. அரிமா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட ஆளுநரும், சர்வதேச இயக்குநர் ஒப்புதல் மதனகோபால் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார். இதில் நேரு நகர் அரிமா சங்கத் தலைவர் நேரு நகர் நந்தகுமார், இ.எஸ்.ஐ. டீன் மருத்துவர் ரவீந்திரன், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் மருத்துவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரிமா சங்கத்தின் நக்கீரன், மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...