கோவை: கருத்து சுதந்திரத்துக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று முதல் சட்டமன்ற கூட்டம் கடந்த 21ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று ஆளுநர் உரை மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள், மீத்தேன், ஈத்தேன் எட்டுவழிச்சாலை உட்பட எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் உட்பட அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், அதேபோல கருத்து சுதந்திரத்துக்கு எதிராக தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்றார். இந்த அறிவிப்பை பத்திரிக்கை துறையை சேர்ந்த அனைத்து அனைவரும் வரவேற்றுள்ளனர்.