கோவை: பொள்ளாச்சியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட மணப்புரம் நகை அடகு கடைக்கு சீல் வைத்து வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஏற்கனவே நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசிய விற்பனைப் பொருட்கள் கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொள்ளாச்சி - உடுமலை சாலையில் மணப்புரம் நகை அடகுக் கடை விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு, வாடிக்கையாளர்களை அனுமதித்து அந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு கிடைத்தது.
இந்த நிலையில், தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற துணை தாசில்தார் சுப்ரியா தலைமையிலான வருவாய் துறையினர், அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த நகை அடகு கடையை பூட்டி சீல் வைத்தனர்.