கோவை: வால்பாறையில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் மழையால், தேயிலைத் தோட்டங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வார காலமாக வால்பாறையில் மழை பெய்து வந்தது. இந்தநிலையில், கடந்த இரண்டு தினங்களாக மழை ஓய்ந்து வெயில் அடித்து வருகிறது. குளிர்ச்சியான மழைக்காலம் மாறி, வெப்ப காலநிலை மாறி வருவதால் தேயிலை செடிகளில் கொசு அதிகமாக உற்பத்தி ஆகிறது. இந்தக் கொசுக்கள் தேயிலைச் செடிகளின் அடிப்பகுதியில் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதோடு தேயிலைச் செடியின் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சி எடுத்து விடுகின்றன.

இதன் காரணமாக தேயிலைச் செடிகள் கருகி உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் விதமாக தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் கொசுவை அழிக்க மருந்தடிக்கும் பணியில் தீவிமாக ஈடுபட்டுள்ளனர். காலை, மாலை இரு வேளைகளிலும் நவீன இயந்திரங்கள் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.