கோவை: கோவையில் அனைத்து வகை தொழில் நிறுவனங்களும் செயல்படும் வகையில் தளர்வு ஏற்படுத்துமாறு, தமிழக அரசிடம் இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கையில்,
ஊரடங்கு காரணமாக வர்த்தகம், தொழிற்சாலைகள், சேவைகள் என அனைத்தும் சிரமங்களை சந்தித்துள்ளன. ஆகவே, அனைத்து கடைகளையும் காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரையும், அனைத்து வகை தொழில் நிறுவனங்களையும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரையும் செயல்படுவதற்கு தமிழக அரசிடம் பரிந்துரைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
மேலும், நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, தொழில்நிறுவனங்கள், கடைகளை திறந்து வைக்க அனைவரும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
எனவே, தமிழக முதலமைச்சரும் கோவையில் தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறப்பு விஷயத்தில், தளர்வு ஏற்படுத்த பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.