கோவை: கோவையில் கொரோனா குறைந்தாலும் உடனடியாக சிகிச்சை மையங்கள் மூடப்படாது என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இதனால் சிகிச்சை மையங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக காலி படுக்கைகள் உள்ளன.
மேலும், மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4,597 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் 2,630 படுக்கைகள் காலியாக உள்ளன. 2,808 சாதாரண படுக்கைகளில் 2,188 படுக்கைகளும், 852 அவசர சிகிச்சை படுக்கைகளில் 350 படுக்கைகளும் காலியாக உள்ளன.
இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 5,228 படுக்கைகள் உள்ளன. இதில், தற்போது 1,160 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4,068 படுக்கைகள் காலியாக உள்ளன.
இது குறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவதால் கொரோனா சிகிச்சை மையங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக காலி படுக்கைகள் உள்ளன. இருப்பினும் கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
எனவே, இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் எதுவும் மூடப்படாது. மருத்துவ கட்டமைப்புகள் அப்படியே இருக்கும். மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.