கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அனுமதியின்றி செயல்பட்ட எட்டு தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இருகூர் காமாட்சிபுரம், அந்தப் பை கவுண்டன்புதூர் பகுதிகளில் ஊரடங்கு விதி முறைகளை மீறி பல கம்பெனிகள் வேலையாட்களை வைத்து இயக்கி வருவதாக பேரூராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பேரூராட்சி செயல் அதிகாரி ராஜேந்திரன் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் அனுமதியின்றி செயல்பட்ட கம்பெனிகளுக்கு சென்று நேரடியாக பார்வையிட்டனர்.
அப்போது அதிக பணியாட்களை வேலையில் ஈடுபடுத்தி இருப்பதைக் கண்டறிந்து, அதன் பின்னர் அந்தக் கம்பெனியில் வேலை செய்த பணியாளர்களுக்கு நோய் தொற்று பரவும் நேரத்தில் சமூக இடைவெளி இல்லாமல் பணியாற்றுவது ஏற்புடையது அல்ல எனக் கூறி பேரூராட்சி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். பின்னர் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய கம்பெனிகளுக்கு ரூபாய் 5,000 அபராதம் விதித்தனர். இருகூர் பகுதிகளில் செயல்பட்டு வந்த விசைத்தறி கூடம் மற்றும் எந்திர தொழில் கூடங்கள் மற்றும் பணியன் கம்பனி உள்ளிட்ட எட்டு கம்பெனிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.