பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பொள்ளாச்சியில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் போலீஸார் அதிரடி வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்பொது, 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் 26 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமான கோவை மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது இந்தநிலையில், கேரளா மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் கோவை, பொள்ளாச்சி அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மதுப் பிரியர்கள் கேரள மாநிலத்திற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும், அங்கிருந்து மது பாட்டில்களைப் பெற்று வரும் கும்பல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனையடுத்து பொள்ளாச்சி மதுவிலக்கு போலீஸார் தமிழக கேரள எல்லைப் பகுதியான வீரப்ப கவுண்டனூர், உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அப்போது இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார் 16 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் வடக்கிபாளையம் மற்றும் தாலுகா காவல், நிலைய போலீஸார் கோபாலபுரம், கோவிந்தபுரம் பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்த 150 மது பாட்டில்கள் 14 லிட்டர் கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.